சீனாவில் மேக் புக் புரோ (ரெட்டினா) லேப்டாப்களை திரும்ப பெற ஆப்பிள் திட்டம்?

சீனாவில் ஆப்பிள் நிறுவனத்தின்  மேக் புக் புரோ (ரெட்டினா) லேப்டாப்களில் உள்ள பேட்டரி (மின்கலன்) அதிகமாக வெப்பமாவதால் அந்த லேப்டாப்களை திரும்ப பெற உள்ளதாக  மாநில ஒழுங்குமுறை விற்பனைக் கட்டுப்பாட்டு அலுவலம் தெரிவித்துள்ளது

2015வருடம் இடைக்காலத்தில் வெ ளியிடப்பட்ட மேக் புக் புரோ (ரெட்டினா)  லேப்டாப்களில் 65000 லேப்டாப்களில் உள்ள பேட்டரி(மின்கலன்) அதிக வெப்பமாதல் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் , அது குறித்து 6 விசாரணை அறிக்கைகள் தங்களிடம் உள்ளதாகவும்  மாநில ஒழுங்குமுறை விற்பனைக் கட்டுப்பாட்டு அலுவலம் தெரிவித்துள்ளது

ஆனால் ஆப்பிள் நிறுவனமோ இதுவரை பேட்டரி அதிக வெப்பமாதல் குறித்த எந்த பிரச்னையும் இது வரை வரவில்லை என்று தெரிவித்துள்ளது
மேலும் தங்கள் வாடிக்கையாளர்கள் பேட்டரி அதிகமாக வெப்பமாக இருப்பதால் கருதினால் உடனடியாக  அந்த லேப்டாப் ஐ தங்கள் சேவை மையத்திற்கு கொண்டு சென்று இலவசமாக பேட்டரியை மாற்றிக்கொள்ளவும் வலியுறுத்து உள்ளது