டில்லி

ந்தியாவில் செய்யப்படும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன் எக்ஸ் ஆர் மாடல்கள் விற்பனை இந்தியாவில் தொடங்கி உள்ளது.

உலக மொபைல் போன் சந்தையில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.  மொபைல் உலகில் முன்னோடி எனக் கூறப்படும் ஆப்பிள் நிறுவனம் தனது ஐ போனை இந்தியாவில்  விற்பனை செய்ய மிகவும் முயற்சி செய்து வந்தது.  ஆயினும் விலை குறைந்த மற்ற மொபைல்களுடன் ஆப்பிள் நிறுவனத்தால் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் பிரதமர் மோடியின் முயற்சியால் ஆப்பிள் நிறுவனம் தனது ஐ போன் உற்பத்தியைச் சீன ஒப்பந்ததாரர் ஃபாக்ஸ்கான் மூலமாக இந்தியாவில் தொடங்கியது.   இந்த போன்களின்  பாகங்கள் அனைத்தும் வெளிநாட்டில் செய்யப்பட்டவை ஆகும்.  ஆனால் அவற்றை இந்தியாவில் ஒருங்கிணைத்து இந்த ஐ போன் உருவாக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் இணைக்கப்பட்டவை எனப் பொறிக்கப்பட்ட அட்டைப் பெட்டிகளில் நேற்று முதல் இந்தியாவின் பல பகுதிகளில் ஐ போனின் எக்ஸ் ஆர் மொபைல்கள் விற்பனைக்கு வந்துள்ளன  இந்த மாடலில் 64 ஜிபி திறன் கொண்ட போன்களின் விலை ரூ.49,900 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது  தற்போது சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் மொபைல்களுக்கு போட்டியாக ஆப்பிள் தனது மொபைல் விலையைக் குறைத்துள்ளது.