இந்தியாவில் ஆப்பிள் எஸ்இ 2 ஐபோன் அடுத்த ஆண்டு அறிமுகம்!!

--

டில்லி:

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இல்லாமல் இந்தியாவில் முதன்முறையாக ஆப்பிள் நிறுவனம் தனது கடந்த ஆகஸ்ட் மாதத்தில் புதிய ஐபோனை அறிமுகம் செய்யும் என்று முன்பு செய்திகள் வெளியானது. தற்போது 2018ம் ஆண்டு மத்தியில் ஆப்பிள் நிறுவனம் 2வது தலைமுறை ஐபோன் எஸ்இ 2 மாடலை அறிமுகம் செய்யவுள்ளது என்று தைவான் எக்கனாமிக் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஐபோன் தைவானில் உள்ள ஓஇஎன் விஸ்ட்ரானில் அசெம்பிள் செய்யப்படும் என்றும் அதில் தெரிவி க்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதத்தில் அமெரிக்காவின் குபர்டினோ நகரை சேர்ந்த ஆப்பிள் நிறுவனம் ஐபோன்களை பெங்களூருவில் அசெம்பிள் செய்வதற்காக விஸ்ட்ரான் கிராப் நிறுவனத்துடன் கூட்டாண்மை ஏற்படுத்தியது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் ஐபோன் எஸ்இ மாடலுக்கு 10 சதவீத சுங்க வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதனால் இதன் விலை குறையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 32 ஜிபி மற்றும் 128 ஜிபி என 2 விதமான ஸ்டோரேஜ் மாடல்களில் கிடைக்கும். இதற்கு ஏ10 ஃபியூசன் சிப் செட் இருக்கும். 12 எம்பி முதன்மை கேமரா, 5 எம்பி இரண்டாவது கேமரா, 2 ஜிபி ராம், 1,700 எம்ஏஹெச் பேட்டரி உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.