நீட் & ஜேஇஇ தேர்வுகளுக்கான விண்ணப்ப திருத்த தேதி நீட்டிப்பு!

புதுடெல்லி: நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு செயல்பாட்டின் முதன்மைத் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பங்களைத் திருத்தம் செய்வதற்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தேசிய தேர்வு முகமை சார்பாக கூறப்பட்டிருப்பதாவது; நீட் மற்றும் ஜேஇஇ போன்றவற்றுக்கு முதன்மை தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் திருத்தம் செய்வதற்கான கடைசித் தேதி ஏப்ரல் 14 என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மே 3ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதால், அன்றைய தினம் இரவு வரையில் திருத்தம் செய்து கொள்ளலாம் என்று தேதி நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

ntaneet.nic.in, jeemain.nta.nic.in என்ற இணையதளங்களில் சென்று விவரம் தெரிந்து கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.