3ஆண்டு எல்எல்பி, முதுகலை எல்எல்எம் சட்டப்படிப்புகளுக்கு இன்றுமுதல் விண்ணப்பம் விநியோகம்…

சென்னை: தமிழகத்தில் உள்ள  அரசு மற்றும் தனியார் சட்டக்கல்லூரிகளில், 3 ஆண்டு எல்எல்பி (LLB) மற்றும் முதுகலை எல்எல்எம் (LLM)  சட்ட படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்ப வினியோகம் தொடங்குகிறது.

இதுதொடர்பாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது,

அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகத்தில்  பயிற்றுவிக்கப்படும் மூன்றாண்டு எல்எல்பி ஹானர்ஸ் சட்டப் படிப்பிற்கான விண்ணப்பம் செப்டம்பர் 30ந்தேதி (இன்று)  முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் முதுகலை LLM சட்டப் படிப்பிற்கான விண்ணப்பங்கள் வரும் அக்டோபர் 7 ஆம் தேதி முதல் விநியோகிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

விண்ணப்பங்களை www.tndalu.ac.in என்கிற இணையதள பக்கத்திலிருந்தும், அந்தந்த சட்டகல்லூரிகள் வாயிலாகவும் வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அக்டோபர் 28-ம் தேதி முதல் நவம்பர் 4ம் தேதி வரை சமர்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.