வரும் 22-ம் தேதி முதல் முதுகலை படிப்புகளுக்கு விண்ணப்பிக்கலாம்… சென்னை பல்கலைக்கழகம்

சென்னை:
ரும் 22-ம் தேதி முதல் முதுகலை படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மேலும் மாணவர் சேர்க்கை சேப்பாக்கம், மெரினா, கிண்டி, தரமணி வளாகங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா ஊரடங்கால் நாடு முழுவதும் கல்வி நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகள், மேற்படிப்பு விண்ணப்பங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்,   எம்.ஏ, எம்.எஸ்.சி, எம்.பி.ஏ உள்ளிட்ட முதுகலை படிப்புகளுக்கும், முதுகலை டிப்ளமோ படிப்புகளுக்கும் இந்த மாத 22-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணையதளமான  https://www.unom.ac.in/ என்கிற இணையதள பக்கத்தில் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பிக்கலாம் என்று சென்னை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
தைத்தொடர்ந்து மாணவர் சேர்க்கை சென்னை பல்கலைக்கழகத்திற்குட்பட்ட சேப்பாக்கம் வளாகம், மெரினா, கிண்டி, தரமணி ஆகிய வளாகங்களில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.