சென்னை:
மிழகத்தில் கலை அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும், அதற்கான  இணையதளம் ஓரிரு நாளில் தொடங்கி வைக்கப்படும்  என  உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. 6வது கட்டமாக ஊரடங்கு ஜூலை 31ந்தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்டு உள்ளது.
முன்னதாக ஊரடங்கால் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியானது. இதையடுத்து, பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணாக்கர்கள் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. தற்போது அரசு வழங்கியுள்ள தளர்வுகள்  காரணமாக  பல தனியர் கல்வி நிறுவனங்கள் இணையதளங்கள் மூலம் மாணாக்கர்களுக்கு கல்வி போதித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழகத்திலும் கல்வித்துறையினல் பல்வேறு மாற்றங்கள் படிபடிப்யாக செய்யப்பட்டு வருகிறது. பிளஸ்2 தேர்வு எழுதாத மாணாக்கர்களுக்கு வரும் 27ந்தேதி மறு தேர்வு அறிவிக்கப்பட்டுஉள்ளது. அது முடிந்து  ஒரு வாரத்திற்குள் பிளஸ்2 ரிசல்ட் வெளியாகும் என அறிவிக்கப்படு உள்ளது.
இந்த நிலையில் நடப்பாண்டில்,  கல்லூரி சேர்க்கை ஆன்லைன் மூலம் நடைபெறும் என்றும் மாணாக்கர்கள் ஆன்லைனில்  விண்ணப்பிக்கலாம் என்று தமிழக உயர்கல்வித்துறை  அமைச்சர் கே. பி. அன்பழகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் இன்னும்  2 நாள்களில் மாணவர்கள் சேர்க்கைக்கான இணையதளம் தொடங்கி வைக்கப்படும் என்று  தெரிவித்துள்ளார்.