ஆயுஷ் அமைச்சக செயலாளராக தமிழரை நியமனம் செய்யுங்கள்! சசிதரூர்

டெல்லி:

யுஷ் அமைச்சக செயலாளராக தமிழரை நியமனம் செய்யுங்கள் என்று மத்தியஅரசுக்கு காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சசிதரூர் ஆலோசனை கூறியுள்ளார்.

யோகா மற்றும் இயற்கை மருத்துவர்களுக்கான ஆன்லைன் பயிற்சி வகுப்பின்போது, இந்தியில் பேசிய ஆயுஷ் செயலாளரின் நடவடிக்கை கடுமையான விமர்சனத்தை ஏற்படுத்தியது. அவருக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர், ஆயுஷ்செயலரின் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்தி ருப்பதுடன், தமிழ் தெரிந்தவரை அந்த பணிக்கு நியமியுங்கள் என்று வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட் பதிவில்,

மத்திய அரசின் ஊழியர் ஒருவர் இந்தி தெரியாத தமிழர்களை வெளியேறும்படி கூறியது அதிர்ச்சி அளிக்கிறது. இந்த அரசுக்கு கொஞ்சமாவது கண்ணியம் இருந்தால் அந்த செயலாளரை பணியில் இருந்து நீக்கிவிட்டு அந்த இடத்தில் ஒரு தமிழ் தெரிந்தவரை பணியில் அமர்த்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.