சென்னை: சென்னை மாநகராட்சியில் கோவிட்19 தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலத்துக்கு பணிபுரிவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்திலேயே கொரோனா பாதிப்பு அதிமுள்ள மாவட்டமாக சென்னை மாநகராட்சி திகழ்கிறது. சென்னையில், இதுவரை 1,18,614 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில்,  4,629 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய நிலையில், 31,1346 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் உள்ள  தேனாம்பேட்டை, அண்ணா நகர், கோடம்பாக்கம், அடையாறு, ராயபுரம் ஆகிய மண்டலங்களில் அதிக அளவில் தொற்று ஏற்பட்டுள்ளது.  இதையடுத்து, கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலத்துக்கு பணிபுரிவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள் நியமனம் செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 

இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாதம் ரூ.60ஆயிரம் ஊதியத்தில் 150 மருத்துவர்களும், ரூ.15 ஆயிரம் ஊதியத்தில் 150 செவிலியர்களும் நியமிககப்பட உள்ளனர். இதற்கான நேர்காணல் 29, 30ந்தேதி நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.