பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் மற்றும் முதன்மை செயலாளர் நியமனம்!

டில்லி:

பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகராக பி.கே.சின்ஹாவும், மற்றும் முதன்மை செயலாளராக டாக்டர் பி.கே.மிஸ்ராவும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதற்கான ஆணையை அமைச்சரவை நியமனக் குழு அறிவித்து உள்ளது.

மத்திய அமைச்சரவையின் பணிநியமனக் குழு பி.கே.சின்ஹாவை மோடியின், முதன்மை ஆலோசகராக, சிறப்பு பணி அதிகாரியாக பிரதமரின் அலுவலகத்தில்  நியமித்து உத்தரவிட்டு உள்ளது. இவர் இன்றுமுதல் பணியில் சேர ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

அதுபோல, டாக்டர் பி.கே.மிஸ்ராவை கூடுதல் முதன்மை செயலாளராகவும் மத்திய கேபினட் நியமன குழுவினர் நியமித்து உள்ளனர். அவரும் இன்றுமுதல் இந்த பணியை ஏற்க உத்தரவிடப் பட்டு உள்ளது.