ஜெ. சிகிச்சை தொடர்பான சிசிடிவி பதிவுகள்: அப்பல்லா நிர்வாகம் நாளை பிரம்மான பத்திரம் தாக்கல்

சென்னை:

ஜெ.சிகிச்சை தொடர்பான சிசிடிவி பதிவுகள் இல்லை என்று மறுத்துவிட்ட அப்பல்லா நிர்வாகம், அதுகுறித்து நாளை விசாரணை ஆணையத்தில் பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய இருப்பதாக கூறப்படுகிறது.

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள ஒய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் இதுவரை 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தி  முடித்துள்ளதாக தெரிவித்துள்ளது. தற்போது இறுதிக்கட்ட குறுக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

அதைத்தொடர்ந்து, ஜெ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது முதல் இறுதி வரையிலான சிசிடிவி பதிவுகளை தாக்கல் செய்யும்படி,அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகத்துக்கு விசாரணை ஆணையம்  கடிதம் எழுதியது.

அதற்கு பதில் தெரிவித்த அப்பல்லோ நிர்வாகம்,  சிசிடிவி பதிவுகள் அதிகபட்சமாக 45 நாட்கள் வரை சேமிப்பில் இருக்கும் என்றும், அதன்பிறகு புதிய காட்சிகள் பதிவாகம்போது, பழைய காட்சிகள் தானாகவே அழிந்து விடும் என்றும், இதன் காரணமாக ஜெ. தொடர்பான சிசிடிவி பதிவுகள் அழித்துவிட்டது என தெரிவித்தது.

ஆனால், இதை ஏற்காத விசாரணை ஆணையம்  மீண்டும் அப்பல்லோ நிர்வாக அதிகாரியை அழைத்து விசாரணை நடத்தியது. அதைத்தொடர்ந்து,  சிசிடிவி பதிவுகள் குறித்து பிரம்மான பத்திரத்தை நாளை விசாரணை ஆணையத்தில் அப்பல்லோ நிர்வாகம் சமர்ப்பிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ற்கனவே, ஜெ.சிகிச்சை பெற்ற ஒரு வீடியோவை சசிகலா தரப்பு வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்திய நிலையில், மற்ற பதிவுகளும் அவர்களிடமே சிக்கி இருக்கலாம் என கூறப்படுகிறது.