தமிழகத்தில் தொழில் தொடங்க ஒற்றை சாளர முறையில் அனுமதி: தொழில்கூட்டமைப்பு கருத்தரங்கில் எடப்பாடி தகவல்

சென்னை:

மிழகத்தில் தொழில்தொடங்க ஒற்றை சாளர முறையில் ஒப்புதல் வழங்கப்படம் என்று அகில இந்திய தொழில்கூட்டமைப்பு கருத்தரங்கில் தமிழக முதல்வர் எடப்பாடி பேசினார்.

மணப்பாக்கத்தில் நடந்த இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றிய தமிழக முதல்வர்,  2023- தொலை நோக்கு திட்டமே தமிழக அரசின் இலக்கு எனக் கூறினார்.

மேலும்,  மனித செயல்பாடு டிஜிட்டலுடன் தொடர்புடையதாக மாறும்  என்றவர்,  தொழில்நுட்ப வளர்ச்சிக்காக தமிழக அரசு  கொள்கை வெளியிட்டுள்ளது என்று கூறினார்.

வேலைவாய்ப்பு பெறும் வகையில் மாணவர்களின் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த முதல்வர்,  அரசின் சேவைகளை இணையத்தில் பெற வசதி செய்யப்பட்டுள்ளது என்றும், . தமிழகத்தில் முதலீட்டிற்கு உகந்த சூழல் உள்ளது, தொழில்வளம் பெருகுவது உறுதி என்றும் கூறினார்.