டெல்லி: பாராளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் தொடங்கி உள்ள நிலையில், முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும் வகையில்,  இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் கூடுகிறது.

கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில், பாராளுமன்ற கூட்டத்தொடர் பல்வேறு கட்டுப்பாடு களுடன் நேற்று தொடங்கியது. இந்த கூட்டத்தொடரில், மத்தியஅரசு பல மசோதாக்களை நிறை வேற்ற ஆயத்தமாகி வருகிறது, நேற்று பாராளுமன்ற மக்களவையில் ‘எம்.பி.க்கள் சம்பளம், இதர படிகள், ஓய்வூதியம் திருத்த மசோதா’ தாக்கல் செய்யப்பட்டது. பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், மேலும் பல மசோதாக்கல் செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் வகையில்  பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் இன்று பிற்பகல் 1.30 மணிக்கு நடைபெற உள்ளது.

நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், முக்கிய மசோதாக்கள் மற்றும் கொரோனா நடவடிக்கை, உள்பட பல்வேறு  அம்சங்கள் குறித்து ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பொருளாதார விவகாரங்கள் குழு அமைச்சக குழுவுடன் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தப்படும் எனவும் கூறப்படுகிறது.