டெல்லி: சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாளைய தினம் (ஏப்ரல் 14) நாடு முழுவதும் பொது விடுமுறை விடப்படுவதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. அன்றைய நாளில் அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 14ந்தேதி பாபா சாகேப் என்றழைக்கப்படும் பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கரின் பிறந்தநாள்  கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளை  நடப்பு ஆண்டு (2021) முதல் பொதுவிடுமுறையாக அறிவித்து மத்தியஅரசு கடந்த 2 வாரங்களுக்கு முன்பு  உத்தரவிட்டது.

இந்த நிலையில்,  நாளை (ஏப்ரல் 14) சட்டமேதை அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாள் விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இதற்காக நாடு முழுவதும் அனைத்து மத்திய அரசு அலுவலகங்களுக்கும் பொது விடுமுறை விடப்படுவதாக அதிகாரப்பூர்லவமாக அறிவிக்கப்பட்டுள்ளது.