நாளை வாக்குப்பதிவு: தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் நாளை பகல் காட்சிகள் ரத்து

சென்னை:

மிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில்,  தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் நாளை காலை காட்சி மற்றும்  பகல் காட்சிகள் ரத்து  செய்யப்பட்டுள்ளது.

வாக்காளர்கள்  தங்களது ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வேண்டும் என்றும், 100 சதவிகிதம் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்ற அடிப்படையில்,  தமிழகம் முழுவதும்  நாளை திரையரங்குகளில் காலை மற்றும் பகல் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து  திரையரங்கு உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.