இன்று உலக மலேரியா தினம் உலக நாடுகளால் கடைபிடிக்கப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25-ஆம் தேதி உலக மலேரியா தினம் கடைபிடிக்கப்படுகிறது. மலேரியாவுக்கு முற்றுப்புள்ளி  வைக்கும் நடவடிக்கைகளை ஆதரிக்கவே இந்த நாள் ஐநாவின் சுகாதார அமைப்பினால் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

மலேரியா அற்ற உலகம் என்ற பொது இலக்கைச் சுற்றி உலக மலேரியாவுக்கு எதிரான சமுதாயத் தின் ஆற்றலையும் அர்ப்பணிப்பையும், மலேரியாவைத் தடுக்கவும், கண்டறியவும் அதற்கு சிகிச்சை அளிக்கவும் உரிய கருவிகளை விரிவுபடுத்தி அப்பணியில் அதிகதிகமாக முதலீடு செய்யவும் உலக நாடுகளுக்கு  உலக சுகாதார நிறுவனம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மனித குலத்தின் பழம் எதிரியான மலேரியாவைக் கட்டுப்படுத்துவதில் அடைந்துள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை வலியுறுத்தும் வேளையில், மலேரியாவில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் உலக சுகாதார நிறுவனம் தகவல்களை விவரித்துள்ளது.

மலேரியா உயிருக்கு ஆபத்தான ஒரு நோய்: ஆனால் தடுக்கவும் குணப்படுத்தவும் முடியும். இந்த நோய்  பெண் அனோஃபெலஸ் கொசுவினால் பரப்பப்படும் ஒட்டுண்ணிகளால் மலேரியா பரவுகிறது.

இந்த நோயினால் 2016-ம் ஆண்டு நாடு முழுவதும் 445000 மரணங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்து உள்ளது.

உலக நாடுகளில் அர்மேனியா, மால்தீவுகள், மொராக்கோ, கிர்கிஸ்தான், ஸ்ரீலங்கா மற்றும் துர்க்மெனிஸ்தான் ஆகிய 6 நாடுகள் மலேரியா முற்றிலும் ஒழிக்கப்பட்ட நாடுகள் என்ற பெருமையை பெற்றுள்ளன. அதேவேளையில், ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் மலேரியா பெருகி வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் மலேரியா  பரவி வருகிறது. நாட்டின் ;கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் மற்றும் காடு, மலை அடர்ந்து மலையின மக்கள் வாழும் பகுதிகளில் இருந்து மலேரியா நோய் காணப்படுவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக ஒடிசா , சத்திஸ்கர், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா மற்றும் திரிபுரா, மேகாலயா, மிஸோரம் போன்ற சில வடகிழக்கு மாநிலங்களில் மலேரியா பாதிப்பு இருப்பதாகவும் இதை கட்டுப்படுத்த சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், தேசிய உத்திசார் திட்டம், தேசிய நோய்பரப்பிகள் மூலம் பரவும் நோய்த் தடுப்புத் திட்ட இயக்ககத்தால் உலக சுகாதார நிறுவனத்தின் ஆதரவோடு 2027-க்குள் இந்தியாவை மலேரியா அற்ற நாடாக மாற்றும் வரைவு திட்டம் வகுக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மலேரியா பரவராமல் தடுக்க சுற்றுச்சூழல் மேலாண்மை மற்றும் சமுதாய விழிப்புணர்வு, கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறிந்து ஒழித்தல் போன்ற பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகிறத.

நாம் ஒவ்வொருவரும் சுற்றுப்புறச் சூழலை பேணிக்காப்பதன் மூலம் நமது நாட்டை மலேரியா இல்லாத நாடாக மாற்ற முயற்சி எடுப்போம்.