2018-ம் ஆண்டிற்கான எச்1-பி விசாவுக்கு ஏப்ரல் 3முதல் விண்ணப்பிக்கலாம்!

--

 

2018ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை செய்ய விரும்புபவர்களுக்கான எச்1-பி விசா விண்ணப்பம் ஏப்ரல் 3 முதல் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் வெளிநாட்டினர்  வேலைக்கு செல்ல வேண்டுமானால் எச்1பி விசா பெற வேண்டியது அவசியம். ஆனால், டிரம்ப் அமெரிக்க அதிபராக வந்தபிறகு விசா பெறுவதில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதையடுத்து தற்காலிகமாக விசா கொடுப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஐந்திய ஐடி நிறுவனங்கள் மற்றும் பல துறைகளை சேர்ந்த பொறியாளர்கள், மேற்படிப்புக்கு செல்ல விரும்புவர்கள் அடுத்த ஆண்டு செல்ல,  வரும் ஏப்ரல் மாதமே விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. ‘

இதுகுறித்து, அமெரிக்கக் குடியுரிமை மற்றும் குடியேற்றம் சேவைகள் அமைப்பு கூறியிருப்பதாவது,

திறமையான இலங்கலை மற்றும் முது கலைப் பட்டம் பெற்ற ஊழியர்கள் அல்லது அதற்கு நிகரான ஊழியர்களின் விண்ணப் பங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

எச்1பி விசா பெறுபவர்கள் முக்கியமாக அறிவியல், பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பிரிவுகளில் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

எச்1-பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்கள் அனைத்து விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும் போது எல்லா விதிகளையும் முறையாகப் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளது.

ஆராய்ச்சி மற்றும் அறிவியல் நிறுவனங்கள் பணிகளுக்காக வருபவர்களுக்கு இந்த எச்1-பி விசா எண்ணிக்கை வரம்பில் இருந்து விலக்கு உண்டு.

மேலும் ஏப்ரல் 3-ம் தேதிக்கும் முன்பே 2018-ம் ஆண்டிற்கான எச்1-பி விசா பெறுவதற்காக விண்ணப்பித்து இருந்தால் அந்த விண்ணப்பங்கள் ரத்து செய்யப்படும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.