ஆசியப் போட்டியில் முதல் பதக்கத்தை பதிவு செய்த இந்தியா – துப்பாக்கி சுடுதலில் வெண்கலம்

ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடுதல் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அபூர்வி சந்தெலா-ரவிகுமார் ஜோடி வெண்கலத்தை வென்று பதக்க பட்டியலை தொடங்கி உள்ளனர்.

18 வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியாவில் உள்ள ஜகார்த்தா நகரில் நடைபெற்று வருகிறது. நேற்று கோலாகலமாக போட்டியின் துவக்க விழா நடைபெற்றது. இதில் இந்தியா சாரில் நீரஜ் சோப்ரா தேசிய கொடியை ஏந்தி வர வீரர், வீராங்கனைகள் அணிவகுத்து வந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

ravikumar

இதனை தொடர்ந்து இன்று நடைபெற்ற கலப்பு இரட்டையருக்கான 10 மிமீ துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவை சேர்ந்த அபூர்வி சந்தெலா-ரவிகுமார் ஜோடி சிறப்பான செயல்பட்டு வெண்கலப் பதக்கத்தை வென்றனர். இவர்கள் இருவரும் இலக்கினை 9.7, 10.6, 9.7, 9.7 என்ற புள்ளிகளில் குறிவைத்து மூன்றாவது இடத்தை பெற்றனர்.

லின்-லு சீன தைபே ஜோடி முதலிடத்தை பெற்று தங்கம் வென்றது. இரண்டாமிடம் பிடித்த ஜாவோ-யாங் இணை வெண்கலம் வென்றனர்.

இந்த வெற்றியின் மூலம் முதல் போட்டியிலேயே இந்தியா பதக்க வேட்டையை தொடங்கி உள்ளது. வெற்றிபெற்ற இருவருக்கும் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.