ஏ ஆர் முருகதாஸ் கைவண்ணத்தில் தமிழில் அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்

சென்னை

வெஞ்சர்ஸ் எண்ட் கேம் ஆங்கில திரைப்படத்தின் தமிழ் வசனங்களை இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் எழுத உள்ளார்.

ஹாலிவுட்  படங்களுக்கு இந்தியாவில் மிகவும் ரசிகர்கள் உண்டு.   அதிலும் வட்டார மொழி ரசிகர்கள் முதலில் மொழி தெரியாமல் ரசித்து வந்த நேரத்தில் அந்த படங்கள் மொழி மாற்றம் (டப்பிங்) செய்யப்பட்டு வெளியான பிறகு நேரடி இந்திய மொழிப் படங்களை விட  வசூலை குவிக்கத் தொடங்கின.

கடந்த டிசம்பர் மாதம் அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் திரைப்படத்தின் டிரெயிலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.   இந்த திரைப்படமும் இந்தியாவில் ஆங்கிலத்தில் மட்டுமின்றி இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளிவர உள்ளது.

இதில் தமிழ் திரைப்படம்  வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி ஏ ஆர் முருகதாஸ் வசனத்தில் வெளி வர உள்ளதாக அறிவிப்புக்கள் வந்துள்ளன.    பிரபல இயக்குனரான முருகதாஸ் தமிழ், இந்தி உள்ளிட்ட பல இந்திய மொழிகளில் ஏற்கனவே பல வெற்றி படங்களை தந்துள்ளார்.