லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ‘மாஸ்டர்’படம் கொரோனா ஊரடங்கு காரணமாக ரிலீஸ் தள்ளி போய்க்கொண்டே இருக்கிறது.
மாஸ்டர் படத்தை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் ‘தளபதி 65’ படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்காக இந்த கூட்டணி மீண்டும் இணையப்போவதாக கூறப்பட்டது.
ஆனால் தற்போது ‘தளபதி 65’ படத்தில் இருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால் ‘தளபதி 65’ படத்தின் இயக்குனர் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் விரைவில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.