‘ சிங்கப்பெண்ணே ‘ பாடலை நேரலையாக பாடும் ஏ.ஆர்.ரஹ்மான்…!

அட்லி இயக்கத்தில் , விஜய் நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் படம் பிகில். ஏஜிஎஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ள இப்படத்தில் விஜய், அப்பா (பிகில்) மற்றும் மகன் (மைக்கெல்) என்று இரு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி, இந்துஜா, ரெபா மோனிகா ஜான், விவேக், கதிர், பூவையார், ஐ.எம்.விஜயன், யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இப்படத்தில் இடம் பெறும் சிங்கப்பெண்ணே’ என்ற பாடல் சமீபத்தில் வெளியானது. பெண்களை போற்றும் விதத்தில் உருவான இப்பாடல் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது.

இந்நிலையில் ஆகஸ்ட் 10ம் தேதி சென்னையில் நடைபெற இருக்கும் இசை நிகழ்ச்சியில், சிங்கப்பெண்ணே’ என்ற பாடலை ரசிகர்கள் முன்னிலையில் :live:நேரலையாக பாட இருப்பதாக ஏ.ஆர்.ரஹ்மான் அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.