உலக கோப்பை ஹாக்கி தொடரின் துவக்க விழாவில் இசையமைக்கும் ஆஸ்கர் நாயகன்

உலக கோப்பை ஹாக்கி தொடரின் தொடக்க நிகழ்ச்சியில் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர். ரகுமான் இசை அமைத்து நேரலையில் பாட உள்ளார்.

Hockey

14வது உலக கோப்பை ஹாக்கி தொடர் வரும் நவம்பர் மாதம் 28ம்தேதி ஒடிசாவில் தொடங்குகிறது. இந்த போட்டி டிசம்பர் மாதம் 16ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா உட்பட 16 அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன. இந்நிலையில் இந்த ஹாக்கி போட்டியின் தொடக்க விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரகுமார் இசையமைக்க உள்ளார்.

இது தொடர்பாக ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக் தனது டிவிட்டர் பதிவில் பின்வருமாறு கூறியுள்ளார், “ உலகக்கோப்பை ஹாக்கி தொடா் துவக்க விழாவில் பாடலாசிரியா் குல்தீப் எழுத்தில், இசை அமைப்பாளா் ஏ.ஆா்.ரகுமான் உலக கோப்பைக்கான பாடலை இசை அமைத்து பாடுகிறாா் என்பதை மகிழ்ச்சியுடன் தொிவித்துக் கொள்கிறேன் ” என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்த தகவல் ஏ.ஆர். ரகுமான் ரசிகர்களியே பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.