எனியோ மோரிகோனே மறைவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இரங்கல்….!

--

ஹாலிவுட்டின் மிகப் பிரபலமான இசையமைப்பாளர் எனியோ மோரிகோனே நேற்று (ஜூலை 6) காலை ரோமில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 91

அவருடைய மறைவு உலக அளவில் உள்ள அவருடைய ரசிகர்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

எனியோ மறைவு குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,

“எனியோ மோரிகோனே போன்ற ஒரு இசையமைப்பாளரால்தான், மெய்நிகர் காலத்துக்கும், இணைய காலத்துக்கும் முந்தைய காலகட்டத்தில் இத்தாலியின் அழகு, கலாச்சாரம், காதல் ஆகியவற்றை உங்கள் உணர்வுகளுக்குக் கொண்டு சேர்க்க முடியும். நம்மால் செய்ய முடிவது எல்லாம், அந்த ஆசானின் படைப்புகளைக் கொண்டாடி, அதிலிருந்து கற்பது மட்டுமே” என்று தெரிவித்துள்ளார்.