‘‘இது எனது இந்தியா கிடையாது’’!! கவுரி லங்கேஷ் கொலை குறித்து ஏஆர் ரஹ்மான் கருத்து

மும்பை:

மும்பையில் நடந்த ‘ஒன் ஹார்ட்’ திரைப்பட விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டார். அப்போது பெங்களூருவில் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் படுகொலை சம்பவம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு அவர் பதில் கூறுகையில்,‘‘இதனால் நான் மனக் கவலை அடைந்துள்ளேன். இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் நடக்ககூடாது. இது போன்ற சம்பவங்கள் இந்தியாவில் நடந்தால், அதன் பிறகு இது எனது இந்தியா கிடையாது. எனது இந்திய வளர்ச்சி மற்றும் மனித நேயத்தை கொண்டதாக இருக்க வேண்டும்’’ என்றார்.