இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்தியாவில் 700க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்பு 17-ஐத் தொட்டிருக்கிறது. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் வட அமெரிக்காவில் நடக்கவிருந்த இசை நிகழ்ச்சிகளை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.

“என் ரசிகர்கள், என் குடும்பம் மற்றும் என் இசைக்குழுவினர் ஆகியோரது நலன் கருதி மே மற்றும் ஜூன் வட அமெரிக்கச் சுற்றுலாவை அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கிறேன். அந்த தருணத்தில் நாம் மீண்டும் ஒன்றிணைந்து சமூகத்துடன் இசையைப் பகிர்ந்து கொள்ளலாம்” என பதிவிட்டுள்ளார்.