சுஷாந்த் சிங் கடைசி படத்தின் 9 பாடல்களை வெளியிட்ட ரஹ்மான்..

டந்த மாதம் தற்கொலை செய்து கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புத் நடித்த கடைசி இந்தி படம் தில் பேச்சாரா. இதில் சஞ்சானா சங்கி ஜோடியாக நடித்திருக் கிறார். முகேஷ் சாப்ரா இயக்கி உள்ளார். உருக்கமான காதல் கதையாகி உருவாகி இருக்கிறது.

இப்படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்திருக்கிறார். வரும் 24ம் தேதி டிஸ்னி ஹாட்ஸ்டாரில் வெளியாகிறது. அதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் இப்படத்தில் 9 பாடல்களுக்கு ரஹ்மான் இசை அமைத்தி ருக்கிறார். அப்பாடல்களின் ஆல்பத்தை தனது இணைய தள பக்கத்தில் வெளியிட் டார். அத்துடன் படத்தில் இடம்பெறும் பாடலின் பட்டியலையும் வெளியிட்டிருக் கிறார்.
#