Random image

விஜய் நடிக்கும் அடுத்த படத்துக்கு இசை ஏ ஆர் ரகுமான்

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்துக்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைப்பார் என அந்நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இது குறித்த அறிவிப்பில்  ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாகவும்,  ஏ ஆர் ரகுமான் இசை அமைக்கிறார் எனவும் கூறப்பட்டுள்ளது.   ஒளிப்பதிவாளராக கிரிஷ் கங்காதரனும், படத்தொகுப்பாளராக ஸ்ரீகர் பிரசாத்தும் அறிவிக்கப்பட்டுள்ள்னர்.   நடிகர்களில் விஜய் மற்றும் யோகி பாபு ஆகியோரின் பெயர்கள் மட்டுமே அறிவிக்கப் பட்டுள்ளது.    கதாநாயகி யார் என்பதும் மற்றுமுள்ள நடிகர்கள் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் துப்பாக்கி, கத்தி படங்களுக்கு அடுத்து மூன்றாவதாக இருவரும் இந்தப் படத்தின் மூலம் இணைகின்றனர்.   ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்த எந்திரன் படத்துக்குப் பிறகு சன் பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரிப்பது குறிப்பிடத்தக்கது.  மெர்சல் படத்துக்குப் பின் ஏ ஆர் ரகுமான் மீண்டும் விஜய் படத்துக்கு இசை அமைக்க உள்ளார்.

இப்படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கி தீபாவளி அன்று படத்தை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.