‘அரண்மனை ௩’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக தகவல்…!

சுந்தர் சி யின் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ மற்றும் ‘ஆக்‌ஷன்’ படங்கள் பெரும் தோல்வியை சந்தித்த நிலையில் சுந்தர்.சியை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தத் தோல்வியிலிருந்து மீண்டு,சுந்தர்.சி.அவரது இயக்கத்தில் ‘அரண்மனை 3’ படத்தை இயக்கவுள்ளார்.

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க விவேக், யோகி பாபு ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஆண்ட்ரியா, ராஷி கண்ணா இருவரும் ஹீரோயின்களாக நடிக்கின்றனர்.

அரண்மனை ஒன்று மட்டும் இரண்டில் மூன்று ஹீரோயின்கள் இருந்தனர் . எனவே, ‘அரண்மனை 3’ படத்தில் நடிக்கும் மூன்றாவது ஹீரோயின் யார் என்ற கேள்வி இருந்து வந்தது. இந்நிலையில், சாக்‌ஷி அகர்வால்தான் அந்த ஹீரோயின் எனத் தகவல் வெளியாகியது .

சத்யா இசையமைக்கும், இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு அரண்மனையில் நடைபெற்றது. கிட்டத்தட்ட 25 நாட்கள் நடந்த படப்பிடிப்பு முடிந்துவிட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடைபெற உள்ளது. முதல் 2 பாகங்களில் இருந்து சொஞ்சம் மாறுபட்டு இந்த படத்தின் கதைக்களம் இருக்கும் என்று தெரியவந்துள்ளது.