பருவநிலை மாற்றங்களை ஆராய்ந்து விவசாயத்துக்கு உதவும் செயற்கைக்கோள்! அறந்தாங்கி மாணவிகள் அசத்தல் கண்டுபிடிப்பு

மதுரை:

ருவநிலை மாற்றங்களை ஆராய்ந்து விவசாயத்துக்கு உதவும் வகையிலான சிறிய ரக செயற்கைக்கோளை அறந்தாங்கி பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் கண்டுபிடித்து அசத்தி உள்ளனர். இது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வரும் சுபானா மற்றும் கீர்த்தனா என்ற மாணவர்களில்,  SFT SAT என்ற சிறியவகை செயற்கைக்கோளை கண்டுபிடித்து உள்ளனர்.

இந்த செயற்கை கோளை டிரோன் மூலம் அனுப்பி அந்த பகுதிகளில் ஆய்வு நடத்தி சோதனை செய்துள்ளனர்.  இதில் பிரமிக்கத்தக்க வகையிலான முடிவுகள் கிடைத்த நிலையில், இதுகுறித்து  பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர்களின் ஆதரவுடன் காட்சிப்படுத்தினர்.

அந்த மாணவிகள், இந்த சிறிய  செயற்கைக்கோள் மூலம் பருவநிலை மாற்றங்களை கண்டுபிடிக்க முடியும் என்று தெரிவித்து உள்ளனர்.

இந்த செயற்கைக்கோள் குறித்து தெரிவித்த மாணவிகள் SFT SAT மூலம், விவசாயத்திற்கு தேவையான   ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு, காற்றின் ஈரப்பதம், காற்றின் நச்சுத்தன்மை ஆகியவை வளி மண்டலத்தில் உள்ளது குறித்து அளவிட்டு அதன் மூலம் பயன்களை பெற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

இதன் காரணமாக விவசாயிகள் என்ன வகையிலான பயிர்களை செய்யலாம் என்பதை நிர்ணயிக்க முடியும் என்றும் தெரிவித்தனர்.

இந்த செயற்கைகோள்,  மெக்சிகோவில் உள்ள ஏர்பேஸ்லா ஹீலியம் கேப்சூல் (Airbasela helium capsule) மூலம்  விரைவில் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த செயற்கை கோளை  மற்றும் அதன் பணிகள் குறித்து, தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து  விளக்கம் அளித்து  வாழ்த்து பெற்றனர்.