அறந்தாங்கி: உடைக்கப்பட்ட பெரியார் சிலை சீரமைக்கப்பட்டு மீண்டும் திறப்பு

அறந்தாங்கி:

றந்தாங்கியில் மர்ம நபர்களால் தலைதுண்டிக்கப்பட்ட சிலை சீரமைக்கப்பட்டு மீண்டும் திறக்கப்பட்டது.

சீரமைக்கப்பட்டு திறக்கப்பட்ட பெரியார் சிலை

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி மருத்துவமனை அருகே  பட்டுக்கோட்டை  செல்லும் சாலையில்  உள்ள பெரியார் சிலையை யாரோ மர்ம நபர்கள்  கடந்த 8ந்தேதி தலை உடைத்து சேதப்படுத்தி இருந்தனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து  சம்பவ இடத்தில் திரண்ட , தி.க., தி.மு.க உள்ளிட்ட அரசியல் கட்சியினர் குற்றவாளியை கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்ககோரி மறியல் போராட்டம் நடத்தினர்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், சிலை உடைத்து யார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

உடைக்கப்பட்ட பெரியார் சிலை

இந்த நிலையில், உடைந்த  பெரியார் சிலையை அந்த பகுதியை சேர்ந்த திராவிடர் கழகத்தினர் சீரமைத்து பெயின்ட்  செய்து, புதிய சிலை போல பெருகூட்டப்பட்டு,  இன்று மீண்டும் திறக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய திராவிடர் கழகத்தினர் சிலையை சேதப்படுத்தியவர்களை விரைவாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.