சென்னை:
ரூ 2000 கோடி பைபர் ஆப்டிக் டெண்டரை மாநில அரசு இன்று 3 மணிக்கு முடித்து 4.30 மணிக்கு அதை திறக்க முயற்சி செய்த நிலையில், டெண்டர் முடிவடையும் சில நிமிடங்களுக்கு முன்பு டெண்டரை திறக்க கூடாது என்று மத்திய அரசின் DPIIT துறை மாநில அரசுக்கு கடிதம் அனுப்பி உள்ளது.

நேற்று டெண்டரை முடித்து அதை திறக்க மாநில அரசு முயற்சித்தது மத்திய அரசின் முந்தைய ஆணையை மீறும் செயலாகும். இந்த டெண்டர் முறைகேடு குறித்து அறப்போர் இயக்கம் 19/04/2020 , 29/04/2020, 14/05/2020 மற்றும் 12/06/2020 தேதிகளில் மத்திய மாநில அரசுகளுக்கு புகாரும் அனுப்பியுள்ளது. மாநில அரசு நம் புகாரில் குறிப்பிட்டுள்ள பல முறைகேடான டெண்டர் மாற்றங்களை சரி செய்யாமல் ரௌடர் விதிமுறை முறைகேடை மட்டும் சரி செய்து டெண்டரை முடிக்க பார்த்தார்கள். Package A வெளிநாட்டு நிறுவனத்திற்கும் Package B, C and D ஒரு குறிப்பிட்ட உள்நாட்டு நிறுவனத்திற்கும் கொடுக்கும் பொருட்டு பெரிய டெண்டர் மாற்றங்கள் செய்த தமிழக அரசு மீண்டும் பழைய டெண்டர் விதிகளுக்கே மாற்றி டெண்டர் விட வேண்டும். அது வரை அறப்போர் போராடும். DPIIT அனுப்பிய கடிதத்தை இத்துடன் இணைக்கிறேன்.