விஜய் இயக்கத்தில் கங்கணா ரணாவத் நடிக்கவுள்ள படம் ‘தலைவி’. இது மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றைப் பின்னணியாகக் கொண்ட படமாகும். இதில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார்.

இந்த படம் தமிழ் , தெலுங்கு ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகவுள்ளது .

நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தில் எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மைசூரில் நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. நவம்பர் 15-ம் தேதி முதல் அரவிந்த்சாமி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.