வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘மாநாடு’. இதன் படப்பிடிப்பு ஜனவரி 20-ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

பாரதிராஜா, எஸ்.ஏ.சி, கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் இதில் சிம்புவுடன் நடிக்கவுள்ளனர். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

யுவன் இசையமைப்பாளராகவும், ஏகாம்பரம் ஒளிப்பதிவாளராகவும் பணிபுரியவுள்ளனர்.

சமீபத்தில் சிம்புவுக்கு வில்லனாக சுதீப் நடிக்கவுள்ளதாகச் செய்திகள் வெளியாயின. ஆனால் சுதீப் தனது ட்விட்டர் பதிவில், ‘தவறான செய்தி’ என்று தெரிவித்தார்.

இந்நிலையில் சிம்புவுக்கு வில்லனாக அரவிந்த்சாமி நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.