அபினவ் காஷ்யப் மீது சட்டரீதியிலான நடவடிக்கை பாயுமென சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் உறுதி….!

இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையைத் தொடர்ந்து கடந்த ஒருவார காலமாகவே பாலிவுட் திரையுலகில் பல சர்ச்சைகள் நடந்துகொண்டிருக்கிறது .

அந்த வரிசையில் சல்மான் கான் நடிப்பில் 2010-ம் ஆண்டு வெளியான ‘தபாங்’ திரைப்படத்தின் இயக்குநர் அபினவ் சிங் காஷ்யப் தனக்கு வரும் வாய்ப்புகளைத் தடுத்தது சல்மான் கான் மற்றும் அவரது குடும்பத்தினர்தான் என்று குற்றம் சாட்டி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டார்.

அபினவ் காஷ்யப்பின் இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் மீது சட்டரீதியிலான நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான் தெரிவித்துள்ளார்.