டில்லி

ந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனம் அருங்காட்சியகங்களுக்குள் செல்ஃபி ஸ்டிக் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

அருங்காட்சியகத்தின் தொன்மை, மற்றும் பாதுகாப்பு கருதியும், வருகை  புரிவோரின் பாதுகாப்பு கருதியும் இந்திய தொல் பொருள் ஆராய்ச்சி நிறுவனம் செல்ஃபி ஸ்டிக் உபயோகப் படுத்துவதை தடை செய்துள்ளது.  இது அருங்காட்சியகத்தின் உள்ளே புகைப்படம் எடுக்க அனுமதிக்கும் விதியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

எந்த ஒரு ஸ்டாண்ட் அல்லது ஃப்ளாஷ் லைட் உடன் புகைப்படங்கள் எடுப்பதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  கல்வி அல்லது ஆராய்ச்சி துறைக்காக ஸ்டாண்டுகள் அல்லது ஃப்ளாஷ் லைட்டுகள் இன்றி புகைப்படம் எடுப்போருக்கும்,  சரியான சான்றிதழ் அளித்தால் மட்டுமே அனுமதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது