பிக்பாஸ் வீட்டின் விதிமுறைகளை அர்ச்சனா – சோம் மீறியதாக குற்றசாட்டு….!

நேற்று டெலிகாலர் டாஸ்க்கில் சனம் போன் செய்து சம்யுக்தாவிடம் பேசியபோது கலீஜ் என்றால் என்ன? என்று கேட்டார். இதுகுறித்து சம்யுக்தா விளக்கம் அளித்தபோது அவங்க வளர்ப்பு அப்படி என சில வார்த்தைகளை சரளமாக பயன்படுத்தினார். இது வீட்டின் உள்ளே வெடித்தது.

கேப்ரியல்லா சோமுடன் பேசிய போனை துண்டித்து, நாமினேஷனுக்குள் சென்றார். இதனை பார்த்த பாலா நான் நேற்று சோம் பற்றி சொன்னது சரிதான் என்பது போல் பேசுவதை காணமுடிகிறது.

இன்றைய ப்ரோமோவில் போட்டியாளர்கள் ரியோ ராஜ்க்கும் சனம் ஷெட்டிக்கும் மோதல் வெடிப்பது போல காட்டப்படுகிறது. மேலும் இதில் டென்ஷனான ரியோ சனமை பார்த்து, ”Mind your words” என்று கோபமாக கத்துகிறார்.

இந்நிலையில் பிக்பாஸ் போட்டியில் இருந்து புதிய வீடியோ இணையத்தில் வைரல் அடித்து வருகிறது. இதில் அர்ச்சனா தனது கைகளால் மைக்கை மூடிக்கொண்டு பேசுவது போலவும், அனிதா வந்த பிறகு, அவரும் சோம்-மும் மைக்கை மீண்டும் மாட்டி கொள்வது போலவும் காட்டப்படுகிறது.

தற்போது நடந்து வரும் போன் டாஸ்க்கில் ரம்யா ரமேஷுக்கு கால் செய்கிறார். பின்பு தன்னையும், நிஷாவையும் நாமினேட் செய்ய காரணம் என்னவாக இருக்கும் என்று கேட்கிறார். அதற்கு ரமேஷ் யாரும் எதிர்பாராதவிதமாக “நிஷா எப்போதும் ஒருவர் பின்பு ஒளிந்து கொள்கிறார்” என்பது போல் கூறுகிறார். இது அனைவருக்கும் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.