கொரோனா அச்சுறுத்தலால் நாட்டில் அனைத்து மக்களும் பொருளாதார நெருக்கடியில் முடங்கி போயுள்ளனர் . இதனால் ஊரடங்கு முடிந்து திரையரங்குகள் திறந்து உடனே படங்களை ரிலீஸ் செய்வதெல்லாம் நடக்காத காரியம் என தயாரிப்பாளர்கள் தங்கள் படங்களை OTT ல் விற்க முடிவு செய்து வருகின்றனர் .
இதை படக்குழுவினர் நேற்று உறுதி செய்திருந்தனர்.இந்த அறிவிப்புக்கு ஐநாக்ஸ் , பிவிஆர் திரையங்க குழுமம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.இது குறித்து அறிக்கையும் விட்டது .
இதனிடையே, ஏஜிஎஸ் நிறுவனம் படங்களும் தயாரிக்கிறது, சொந்தமாக திரையரங்குகளையும் வைத்துள்ளது. ஆகையால், அவர்களுடைய கருத்தை அறிய பலரும் அர்ச்சனா கல்பாத்தியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வந்தனர்.


அவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக அர்ச்சனா கல்பாத்தி கூறியிருப்பதாவது:
“ஓடிடி வெளியீடு vs திரையரங்க வெளியீடு குறித்து பலர் என்னிடம் கேட்கின்றனர். நான் எந்த பக்கமும் இல்லை. நாம் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்பதை நான் நம்புகிறேன். இந்த புயலில் அனைவரும் தப்பிப் பிழைக்கவே முயற்சிக்கிறோம். எனவே ஒரே துறையாக நாம் நேர்மறையாகவும் ஒற்றுமையாகவும் இருப்போம்” என தெரிவித்துள்ளார் .