வருமான வரித்துறை விசாரணைக்கு அர்ச்சனா கல்பாத்தி ஆஜராகியுள்ளார்….!

பிகில் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன் தொடர்பாக சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் நடிகர் விஜய், ஏஜிஎஸ் நிறுவனம், அன்புச்செழியன் உள்ளிட்டோர் வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது.

இதில் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்தில் ரூ.77 கோடி ரொக்கப் பணம், 1.5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்தது.

இது தவிர இந்தச் சோதனையில் ஏராளமான சொத்து ஆவணங்கள், பத்திரங்கள், காசோலைகள், முன் தேதியிட்ட காசோலைகள் கைப்பற்றப்பட்டன.

இதுதவிர படத்தயாரிப்பாளர் ஏஜிஎஸ் நிறுவன உரிமையாளர் கல்போத்தி அகோரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அங்கு அலுவலக வரவு- செலவு கணக்குகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்நிலையில், தற்போது வந்த செய்திகளின்படி, கல்பாத்தி நிறுவனம் சார்பாக அர்ச்சனா கல்பாத்தி, வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக சென்றிருக்கிறார். ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக அவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

பிகில் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன், விஜய்க்கு கொடுக்கப்பட்ட சம்பளம், பைனான்சியர் அன்புச் செழியனுக்கு படத்தில் இருக்கும் பங்கு குறித்து கேள்விகள் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

விஜய் தரப்பில் வழக்கறிஞரும், விஜய்யின் ஆடிட்டருமான அனுபா செழியன் விசாரணைக்கு சென்றிருக்கிறார்.

கார்ட்டூன் கேலரி