Random image

சனம்க்கு ‘ஸ்கெட்ச்’ போட்டு காத்திருக்கும் அர்ச்சனா…..!

நேற்று டெலிகாலர் டாஸ்க்கில் ஆஜீத்திடம், ரியோ பேசி 5 ஸ்டார்கள் கொடுத்தார்.ஆஜீத்திடம் நான் தான் பேசுவேன் என்பது போல ரியோ முன்பே சொன்னதை கேட்டுவிட்ட சனம் வீட்டுக்குள் பெரிய பூகம்பமே ஏற்பட காரணமாகி விட்டார். ஒரே ஒரு போன் கால் பேசுனதுக்கு என்ன இப்படி வச்சு செஞ்சுட்டாங்களே என, ரியோ நினைத்திருக்க கூடும். அந்தளவுக்கு சனம், அனிதா, ரம்யா, சம்யுக்தா, ஷிவானி என பாரபட்சம் பார்க்காமல் அவரை வச்சு செய்து விட்டனர்.

வீட்டுக்கு வெளியே அர்ச்சனா-நிஷா இருவரும் கூடி ஆலோசனை நடத்தினர். அர்ச்சனா, ” டாப்பிள் கார்டு டாஸ்க்கின் போது சனம் என்னை நாமினேட் பண்ணி இருக்கா. எனக்கு டைட்டில் வேணாம்னு நான் 2 வாரத்துக்கு முன்னால அவகிட்ட சொன்னேன் சொல்லி இருக்கா. இந்த டெலிகாலர் டாஸ்க் முடியட்டும். அவளுக்கு வச்சுக்கறேன்,” என நிஷாவிடம் தெரிவித்தார்.

அனிதாவை கிச்சன் டீமில் இருந்து தூக்கி பாத்திரங்கள் கழுவும் அணியில் போட்டது, கேப்ரியலாவை வைஸ் கேப்டன் ஆக்குவதாக சொல்லி பின்னர் ஷிவானியை, ரியோ வைஸ் கேப்டன் ஆக்கியது ஆகிய விஷயங்களை அலசி ஆராய்ந்தனர்.

இந்நிலையில் இன்று சனம் அவரிடம் சென்று “ஒருவர் முகத்தை கூட பார்த்து பேச முடியவில்லை” என்பது போல் வேதனையுடன் கூறுகிறார். அதற்கு அவர்கள் “நாங்கள் அதற்கான முழு உழைப்பையும் போட்டு விட்டோம். இனி எங்களால் முடியாது” என்பது போல் பேசுகின்றனர். அடுத்ததாக ஷிவானிக்கு போன் செய்த ஆரி “பாலாஜியுடன் இருப்பது அன்பா? காதலா?” என்று கேட்க ஷிவானி ஷாக் ஆவதை காண முடிகிறது.