வில்வித்தை உலக கோப்பை போட்டியில் வெண்கலம் வென்றார் தீபிகா குமாரி

--

வில்வித்தை உலக கோப்பை போட்டியில் இந்தியாவின் தீபிகா குமாரி வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.

deeppika

துருக்கியில் உள்ள சாம்சன் நகரில் வில்வித்தை உலக கோப்பை போட்டி நடந்து வருகிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் ரிக்கர் பிரிவின் வெண்கலப்பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவை சேர்ந்த தீபிகா குமாரி ஜெர்மனியை சேர்ந்த லிசா அன்ருச்சை எதிர்க் கொண்டார்.

போட்டியின் முதல் செட்டில் இருவரும் தலா 5 புள்ளிகள் பெற்று சமநிலையில் இருந்தனர். அடுத்த செட்டில் வெற்றியை தீர்மானிக்கும் பொருட்டு இருவருக்கும் 9 அம்புகள் வழங்கப்பட்டன. இருவருமே 9 அம்புகளையும் குறிபார்த்து எய்து நடுவர்களுக்கு சவாலை ஏற்படுத்தினர். இருப்பினும் இலக்கிற்கு மிக அருகில் அம்பு எய்திய காரணத்தினால் தீபிகா குமாரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து இந்தியாவின் தீபிகா குமாரிக்கு வெண்கலப்பதக்கம் வழங்கப்பட்டது.

இந்தியாவில் கிரிக்கெட்டுக்கு வழங்கும் முக்கியத்துவம் மற்ற எந்த விளையாட்டுக்கும் வழங்கப்படுவது இல்லை. வில்வித்தை போட்டியில் பங்கேற்ற தீபிகா குமாரிக்கு பயிற்சியாளர் இல்லை என்பது வருத்தப்பட கூடிய ஒரு விஷயம். இதுகுறித்து தீபிகா குமாரி கூறுகையில், ‘ இது போல பெரிய போட்டியில் முதல் முறையாக பயிற்சியாளர் இல்லாமல் பங்கேற்கிறேன். பதக்கம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது ’ என்று தெரிவித்தார்.