பாரிஸ்: தென் பசிபிக் பிராந்தியத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டின் காலனியான நியூ கேலடோனியா தீவுக் கூட்டத்தின் மக்கள், பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெறுவது குறித்த பொது வாக்கெடுப்பில் பங்கேற்றுள்ளனர்.
அந்த தீவுக்கூட்டத்தின் மக்கள் சுதந்திரம் பெறுவது தொடர்பாக நடத்திவந்த 30 ஆண்டுகால போரட்டத்தில், இதுவொரு முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
மொத்தம் 180000 பேர் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்டனர். “நியூ கேலடோனியா முழு இறையாண்மையுடன் கூடிய சுதந்திரம் பெற வேண்டுமா?” என்று வாக்கெடுப்பில் கேட்கப்பட்டிருந்தது. இதுதொடர்பான விருப்பத்தை மக்கள் வாக்கெடுப்பில் வெளிப்படுத்த வேண்டும்.
வாக்கெடுப்பு நடைபெறும் மையங்கள் காலை 8 மணிக்கே திறக்கப்பட்டன. மொத்தம் 10 மணி நேரங்கள் அவை திறந்திருந்தன.
சுதந்திரத்திற்கு ஆதரவாக அந்த மக்கள் வாக்களித்திருந்தால், பிரான்ஸ் நாட்டின் ஆதிக்கம் விலக்கிக் கொள்ளப்படும். இல்லாதபட்சத்தில், பிரெஞ்சு காலனியாகவே அத்தீவு கூட்டம் நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.