ஆகஸ்டு 12ந்தேதி ஆர்க்கிடெக்சர் நுழைவு தேர்வு!

சென்னை:

ட்டடக்கலை படிப்புகளுக்கான (ஆர்க்கிசடெக்சர்) மாநில அளவிலான நுழைவுத்தேர்வு ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெற உள்ளது.

இந்த படிப்புக்காக இதுவரை 1122 மாணவர்கள் விண்ணப்பம் செய்துள்ளதாகவும், அவர்களுக்கான நுழைவு தேர்வு வரும் (ஆகஸ்டு) 12ம் தேதி நடைபெற உள்ளது என  நாட்டாவின் மாநில செயலாளர் மல்லிகா தெரிவித்துள்ளார்.

நுழைவுத்தேர்வுக்கான முடிவுகள் ஆகஸ்ட் 19ம் தேதி வெளியிடப்பட்ட பின் கலந்தாய்வு தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பி.ஆர்க் என்று சொல்லப்படும் ஆர்க்கிடெக்சர் படிப்பு 5 ஆண்டுகளைக் கொண்ட இளநிலைப் பட்டப்படிப்பு. கட்டிடக் கலையை அடிப்படையாகக் கொண்டது இது.

கட்டிடங்களை வடிவமைத்தல், தட்பவெப்ப சூழ்நிலைக்கேற்ற வகையில் உருவாக்குதல் போன்ற பாடத் திட்டங்களைக் கொண்டிருக்கும்.

ஆர்க்கிடெக்சர் படிக்க விரும்பும் மாணவர்கள், வரைதல், எழுதுதல் போன்றவற்றில் அதிக ஆர்வத்துடன் இருக்க வேண்டும்.

கணிதம், பொருளாதாரம், கட்டிடக்கலையின் வரலாறு, உள் அலங்காரம் போன்ற பாடப்பிரிவுகள் கற்பிக்கப்படும்.பிளஸ் 2 படிப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களை எடுத்துப் படித்திருக்க வேண்டும்.

இதில் சேர  நுழைவுத் தேர்வு அகில இந்திய அளவில் நடத்தப்படுகின்றது. பி.ஆர்க்கில் 18 விதமான பாடத்திட்டங்கள் உள்ளன. இந்தத்  துறையை எடுத்துப் படிக்கும்போது பல்வேறு விதமான வேலைகளில் சேரமுடியும்.

மேற்கொண்டு மாஸ்டர் டிகிரியும் படிக்கும்போது ஏராளமான பணி வாய்ப்புகள் சுலபமாக கிடைக்கும்.