இந்தியாவில் 11 இலக்க மொபைல் எண்களா? டிராய் விளக்கம்

டெல்லி:

ந்தியாவில்  தற்போது புழக்கத்தில் உள்ள 10 இலக்க மொபைல் போன் எண்களை 11 இலக்க எண்களாக மாகக டிராய் (TRAI) பரிந்துரைத்துள்ளதாகவும், விரைவில் மொபைல் போன் எண்கள் அனைத்தும் 11 இலக்க எண்களாக மாறும் என தகவல்கள் வைரலாக பரவின.

இந்த நிலையில்,   11 இலக்கங்கள்  கொண்ட  மொபைல் எண்ணாக மாற்ற வலியுறுத்தவில்லை என்றும், ஒவ்வொரு லென்ட் லைனில் இருந்து மொபைல் எண்ணுக்கு அழைக்கும்போது, முதலில் ஜீரோ ( 0 ) மட்டுமே சேர்க்கவே பரிந்துரை செய்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளது.

இந்திய தொலைத்தொடர்பு ஆணைய ஒழுங்கு ஆணையம் (TRAI)   நாட்டில் 11 இலக்கங்கள் கொண்ட மொபைல் எண்ணைப் பயன்படுத்த  பரிந்துரை செய்துள்ளதாகவும், அதன்படி 10 இலக்க மொபைல் எண்ணை 11 இலக்க மொபைல் எண்ணுடன் மாற்றினால், நாட்டில்  மொத்தம் 1000 கோடி  எண்கள் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என்று அறிவுறுத்தி உள்ளதாகவும் கடந்த இரண்டு நாட்களாக  செய்திகள் பரவின.

இந்த நிலையில், தான் அவ்வாறு பரிந்துரைக்கவில்லை,  லேன்ட் லைன் போனில் இருந்து மொபைல் போனுக்கு அழைக்கும்போது,  அந்த மொபைல் எண்ணுக்கு முன்னால் ‘0’ போட வேண்டும் என்றே பரிந்துரைக்கப்பட்டு இருப்பதாக விளக்கம் அளித்து உள்ளது.

இதுகுறித்து டிராய் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

இப்போதைக்கு, நிலையான  இணைப்புடன், தொடர்பு கொள்ள   மொபைல் அழைப்புகளுக்கு, எண்ணின் தொடக்கத்தில் ‘0’ எண் பயன்படுத்துவது  அவசியமாக உள்ளது.

லேன்ட் லைனில் இருந்து  மொபைல்களை அழைக்க பூஜ்ஜியத்தைப் பயன்படுத்துவது கட்டாயமாக இருக்கும் பட்சத்தில்  நிலை 2, 3, 4 மற்றும் 6 இல் உள்ள அனைத்து இலவச துணை நிலைகளையும் மொபைல் எண்களாகப் பயன்படுத்த முடியும்  என்று டிராய் பரிந்துரை செய்துள்ளது.

லேண்ட்லைன்களிலிருந்து மொபைல் எண்கள் அழைக்கப்படும்போது ‘0’ முன்னொட்டு மட்டுமே பரிந்துரைக்கப்படுகிறது. இதனால் எதிர்காலத்தில் 2,544 மில்லியன் கூடுதல் எண்ணிக்கையிலான எண்களை  உருவாக்க முடியும்.

“மொபைல் சேவைகளுக்கு 11 இலக்க எண்ணும் திட்டத்தை டிராய் பரிந்துரைக்கவில்லை” என்றும்  இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) மறுப்பு தெரிவித்து உள்ளது.

You may have missed