கிராமசபா கூட்டம் நடத்துவது வெட்கமாக இல்லையா? திமுகவை நேரடியாக சீண்டும் கமல்

சென்னை:

ட்டமன்றத்தில் கூட சட்டையை கிழித்து கொள்ளமாட்டேன் என்றும், நேற்று வந்த நாங்கள் நடத்தியதை பார்த்து நீங்கள் கிராமசபா கூட்டம் நடத்துவது, உங்களுக்கு  வெட்கமாக இல்லையா? என்று திமுக தலைவர் ஸ்டாலினை நடிகர் கமல்ஹாசன் நேரடியாக விமர்சித்தார்.

சென்னை ஆர் ஏ புரத்தில் தனியார் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  பங்கேற்ற மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார்.

மாணவர்களிடம் பேசிய கமல்,  ‘அரசியல் மாணவர்களுக்கு வேண்டாம் என்று சொல்வது மடத்தனம் என்று நான் சொல்ல மாட்டேன். ஏனென்றால் நான் ஜார்னலிட் என்றார்.  மாணவர்கள்  ஜாதியை சொல்லிக்கொள்வதில் சந்தோசப்படாமல் இருங்கள். அங்கிருந்துதான் கலவரம் தொடங்குகிறது. தமிழன் என்பது விலாசம். அது  தகுதி அல்ல என்றவர், நாம் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதுதான் தகுதி.

என்னிடம் பலர்  சினிமாலயும் இருக்கீங்க, அரசியலுக்கும் வறீங்களே என்று கேட்கிறார்கள்… ஓட்டான்டிதான் அரசியலுக்கு வரவேண்டும் என நினைத்தீர்களானால் சுரன்டிவிடுவார்கள் என்றார்.

தன்னை  முழு நேர அரசியல்வாதியென்று சொல்லிக்கொள்பவர்கள் திருட்டு பயல்கள் என்று சாடிய கமல், நாலு சினிமா பன்ற கும் இடத்தில் தற்போது ஒன்று மட்டும் பன்னிக்கொண்டிருக்கிறேன். அது என் இழப்பு. அதுதான் அரசியலுக்கான என் பங்களிப்பு. இதைக்காரணமாக கூறித்தான் எனது கட்சிக்கு நிதி திரட்டுவேன் என்று கூறினார்.

எனது பங்களிப்பை செய்து விட்டேன் என்ற கமல், உங்கள் பங்களிப்பைக் கேட்பேன் என்றவர், அதற்காக  நான் சட்டசபையில் சட்டைய பிச்சிக்கிட்டு நிக்கமாட்டேன். அப்டி கிழிஞ்சு போனாலும் வேற சட்ட மாத்திக்கிட்டு வெளில வருவேன் என்று ஸ்டாலினை மறைமுகமாக சாடினார்.

இத்தனை வருடம் கிராம சபை இருப்பது உங்களுக்கு தெரியாதா? நேற்று வந்த சின்ன பயல் செய்ததும் காப்பி அடிக்கிறீங்க? வெக்கமா இல்ல உங்களுக்கு? என்று திமுகவை கடுமையாக விமர்சித்தார். தி.மு.கவை விமர்சிக்க தி.மு.கவே காரணம். மறைமுகமாக அல்ல நேரடியாகவே விமர்சிக்கிறேன் என்றார்.

மீசையை முறுக்கி தொடையை தட்டிவிட்டு கோதாவில் இறங்கமாட்டேன் என்று சொன்னால் மதிக்க மாட்டார் கள். அதேபோல கட்சியைத் தொடங்கிவிட்டு அரசியலுக்கு வரமாட்டேன் என்று சொல்லக்கூடாது. புது ஷுவை மாட்டிக்கொண்டு கூட்டணி எனும் கருப்பு குட்டைக்குள் இறங்கி அழுக்காக்கிக் கொள்ளமாட்டேன் என்று கூறக்கூடாது என்று ரஜினியையும் விமர்சித்தார்.

கமல் டிடிவியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடப்பதாகவும்,  இரு கட்சிகளும் கூட்டணி சேர்வதாக வரும் தகவல் உங்களுக்கு வேண்டுமானால் நல்ல தகவலாக இருக்கலாம். எனக்கு அல்ல’ என்றவர்,  டெல்லியில் எவன் வந்தாலும் அது தமிழகத்தைப் பாதிக்கும். நான் அங்கு போனால் தமிழகம் பாதிக்கப்படாது. அதற்காக நான் அங்க போக வேண்டும் என்று அனது ஆவலை வெளிப்படுத்தினார்.

சபரிமலை விவகாரம் குறித்து பேசிய கமல்,  அய்யப்பனின் டி.என்.ஏவிலேயே பெண்கள் இருக்கிறார்கள் என்று மறைமுகமாக சபரிமலைக்கு பெண்கள் வர அனுமதிக்கு ஆதரவு தெரிவித்தவர், நிறையபேர் படம் பார்க்க வந்தால் எனக்கு சந்தோஷம். அதுபோல நிறைய பேர் வந்தால்  அய்யப்பப்பனும் சந்தோஷப்படுவார் என்று தெரிவித்தார்.

கமலின் இன்றைய பேச்சு திமுக, ரஜினி போன்றோரை கடுமையாக விமர்சிக்கும் வகையில் காட்டமாக இருந்தது. இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Are not you ashamed, Gramma Sabah meeting, Gramma sabha meet, Kamal Hassan criticize DMK, kamalahassan, m.k. stalin, Rajnikanth
-=-