புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் அதிஷ்டசாலிகளா?

--

புதன் என் றால் தெரிந்தவன் என்று பொருள். இதனால்தான் புதனைக் கல்விக்காரகன் அல்லது, வித்யாகாரகன் என்று சோதிடப் புலவர்கள் அழைத்தனர் போலும்! சூரியனுக்கு வெகு அருகாமையில் ஒளிர்வதோடு மிகத்துரிதமாய் மூன்றே மாதங்களுக்குள் சூரிய னைச் சுற்றிவரும் ஆற்றலுடைய கிரகமாகையால் சூரியனைப் பற்றி நன்கு தெரிந்தவன் புதன். புரட் டாசி மாதத்தில் பிறந்தவர்கள் எதையும் கற்றறியும் பாண்டித்தியம் உடையவர்களே. அதுவும் துரித மாய்க் கற்றுணரக்கூடியவர்கள்.

சிறுவயதிலேயே அரிய பெரிய நூல்களைப் புரட்டிப் பார்த்து விடு வார்கள். புரட்டாசியில் தோன்றிய இவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளே!பல நூல்களை நன்றாகப் புரட்டியவர்களா கையால் தர்க்கம் பேசுவதிலும் சமர்த்தர். குதர்க்கம் செய்வதிலும் வித்தகர்.

அரிய நூல்களைச் சேகரிப்பர். சீக்கிரத்தில் அரச யோகத்தை அடைந்திடுவர். கற்றதை மாற்றிப் பேசிப் போற்றுதலைப் பெறுவர். மற்றவர்களைப்போல நடிப்பதில் வெகு சமர்த்தர். படிக்காத மேதைகளும், படித்த பட்டதா ரிகளும் விஞ்ஞானிகளும் மெய் ஞானிகளும் இம் மாதத்தில் பிறந்தவர்களே.

maxresdefault
ஆழ்ந்து சிந்திக்காமல் எந்த விவகாரங்களிலும் தலையிடார். எதையும் திறம்படச் செய்யவேண்டு மென்ற கொள்கை உடையவர். மற்றவர்கள் செய் யும் குற்றங்குறைகள் முதன்முதலில் இவர்களின் கண்களுக்குத்தான் தோன்றும், ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக ஆனால், அழுத்தந் திருத்தமாக எடுத்துக் கூறிடுவர். மற்றவர்கள் சாதாரணமாகப் புரியக்கூடிய தவறுகள் ஏற்படாவண்ணம் தாம் நடந்துகொள்வர்.

மற்றவர்களுடைய முன்னேற்றத் திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவர். தம்முடைய திறமையினாலும் உழைப்பினாலும் உயர்ந்த அந் தஸ்தைத் தேடியடைந்திடுவர். பிறரைப் புகழ்ந்தோ அல்லது குறுக்கு வழிகளைக் கடைப்பிடித்தோ காரி யத்தைச் சாதிப்பது இவர்களுக்குப் பிடிக்காது.

இயற்கையை ரசிப்பவர். சுவையான பண்டங்களைப் புசிப்பவர். நல்ல பேச்சாளர். கலாரசிகர், நடிப்பாற்றல் உடையவர். கற்பனா சக்தியும் கருத்து நிறைந்த தத்துவங்களடங்கிய கவிபாடு வதிலும் தொடர் கதைகளையும், சிறு கதைகளையும் எழுதுவதிலும் நிகரற்று விளங்குவர்.

இவருக்கெனத் தனி நடையை அமைத்துக்கொள்வர். மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவர். சந்தர்ப்பத்திற்கேற்றவாறு தம் கொள்கைகளை மாற்றிக்கொள்வர். காரியத்தை எளிதில் சாதித்து முடிக்கும் சக்தி வாய்ந்தவர். நயமாகப் பேசி மற்றவர்களைத் தம்வசமாக்கிக் கொள்வர்.

சுறுசுறுப்பானவர்கள். ஆனால், சுகஜீவிகள், நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழல்வது போல் ஒரே இடத்தில் நிலைத்துக் காலவரம்பிற்குள் செய்வனவற்றைத் திருந்தச் செய்வர். சிறிய முயற்சியில் பல காரியங்களைச் சாதித்திடுவர்.