மருத்துவ படிப்புக்கு கூடுதலாக 2750 இடங்களை அதிகரித்துள்ள மத்தியஅரசு! ஆனால் ஆசிரியர்கள்……?

டில்லி:

ருத்துவத்துறைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் மத்தியஅரசு, இந்த ஆண்டு 25 மருத்துவ கல்லூரிகளில் புதிய 2750 கூடுதல் இடங்களை உருவாக்கி உள்ளது. ஆனால், அதிகரிக்கும் மருத்துவ மாணவர்களுக்கு கல்வி போதிக்க போதுமான ஆசிரியர்கள் உள்ளார்களா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.

நடப்பு கல்வியாண்டான (2019-2020)ல் கூடுதலாக 25 மருத்துவக்கல்லூரிகள் உள்பட அரசு மருத்துவக்கல்லூரிகளில் கூடுதலாக 2750 மருத்துவ படிப்புக்கான இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த 2012 ம் ஆண்டு முதல், மருத்துவ கல்லூரிகளில் கணிசமான விரிவாக்க நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்ட போதிலும், கடந்த இரண்டு ஆண்டுகளில், புதிய கல்லூரிகளை உருவாக்கி, மத்திய நிதியத்தின் உதவியுடன், தற்போதுள்ள புதிய கல்லூரிகளும் அதிகரித்து வருகின்றன. மேலும் தனியார் 10 மருத்துவ கல்லூரிகளிலும் 1500 இடங்களில் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

ஆனால், அதற்கு தேவையான ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதிதாக தொடங்கப்பட்டுள்ள 35 மருத்துவக்கல்லூரிகளில் குறைந்த பட்சம் 3000 பேராசிரியர்கள் தேவைப்படும் பட்சத்தில்  600 பேராசிரியர்களும், ஆயிரம் உதவி பேராசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.

பேராசிரியர்கள் நியமிக்கப்படாமல் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிப்பது  அநாவசிய நடைமுறைகளுக்கு வழிவகுக்கும் என்று முன்னாள் மத்திய சுகாதாரத்துறை மந்திரி சுஜாதா ராவ்  கூறி உள்ளார்.

முதலில் அரசு, மாணவர்களுக்கு கல்வி போதிக்க  எங்கிருந்து ஆசிரியர்களை பெற்றுக்கொள் கிறார்கள்? அவர்கள் பயிற்சி தரத்தை எப்படி உறுதிப்படுத்துகிறார்கள்? டாக்டர்கள் மற்றும் மோசமான பயிற்சியளிக்கப்பட்ட டாக்டர்கள் பற்றாக்குறை இருப்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளார்.

இந்தியாவின் ஆளுநர்கள் மற்றும் நிதிஆயோக்  குழுவின் மருத்துவ குழுவின் மருத்துவக் குழுவின் தலைவர் டாக்டர் வினோத் பால் கூறும்போது, பேராசிரியர்களின் ஓய்வு வயதை அதிகரித்து, அவர்களை பணிக்கு திரும்பி அழைக்க வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார்,

2018 ம் ஆண்டில், 18 அரசு கல்லூரிககள் மற்றும் 5 தனியார் கல்லூரிகளுக்கும் சேர்த்நது குறைந்த பட்சம் 2000 ஆசிரியர்கள் தேவை. இதுவே கடந்த 2017ம் ஆண்டு 1100 ஆசிரியர்கள் மட்டுமே இருந்தனர். ஆனால், புதிதாக கல்லுரிகள்  திறக்கப்பட்ட வருவதால் ஆசிரியர்களின் தேவையும் அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக மருத்துவ மாணவர் படிப்புக்கான இடங்களை அதிகரிக்கும் மத்திய அரசு, அங்கு தேவையான பேராசிரியர்களையும் நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டு வருகிறது.

மாணவர்களுக்கு தேவையான ஆசிரியர்கள் இன்றி மாணவர்கள் சேர்க்கையை அதிகப்படுத்தி என்ன பயன்? என்று கல்வியாளர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.