சிறப்பு ரயில்களா?  சித்ரவதை ரயில்களா?

மும்பையில் கண்ணில் படுவோரை எல்லாம் பாய்ந்து தொற்றிக்கொள்கிறது, கொரோனா தொற்று.

இதனால் மும்பை நகரமே பீதியில் ஆழ்ந்துள்ளது.

அங்கு சிக்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், சொந்த ஊர் செல்வதற்கு ரயில் நிலையங்களில் தவம் கிடக்கிறார்கள்.

அங்குள்ள லோகமான்யா திலகர் ரயில் நிலையத்தில் இருந்து உத்தரபிரதேச மாநிலத்துக்கு கடந்த வியாழக்கிழமை சிறப்பு ரயில் ஒன்று புறப்பட்டது.

உ.பி.யின் பஸ்தி நகரை அந்த ரயில் 28 மணி நேரத்தில் சென்றடைந்திருக்க வேண்டும்.

ஆனால் நான்கு நாட்களுக்கு பிறகு நேற்று மாலையில் தான் பஸ்தி நகரை அடைந்துள்ளது.

ஆங்காங்கே இருந்து புறப்படும் சிறப்பு ரயில்கள் நேர் பாதையில் செல்ல பல நேரங்களில், சிக்னல் கிடைப்பது இல்லை.

சிக்னல் காட்டும் திசையில்,,ரயில்களை இயக்குகிறார்கள், டிரைவர்கள்.

இதனால்  பல மாநிலங்களை சுற்றி விட்டு, நிர்ணயிக்கப்பட்ட ஸ்டேஷனை ரயில்கள் சென்றடைய காலம் தாமதம் ஏற்படுவதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

சில நேரங்களில் இந்த ரயில்கள், நடுக்காட்டில் நிறுத்தப்படுவதால், பசி, பட்டினியோடு பெண்கள், குழந்தைகள், முதியோர் கடும் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்

– ஏழுமலை வெங்கடேசன்