சென்னை:

ழ்துளை கிணறுகளுக்குள் விழுந்து பலியாகும் குழந்தைகள் மரணம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், பொதுமக்கள் உங்கள் பகுதிகளில் பயன்படுத்தப்படாத ஆழ்துளை கிணறுகள் இருந்தால் உடடினயாக அந்தந்த மாவட்ட கலெக்டர்களுக்கு புகார் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

புகார் தொடர்பாக தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கைளயும் மாவட்டம் வாரியாக அறிவித்து உள்ளது. பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி, தங்கள் பகுதிகளில் உபயோகப்படுத்தாத ஆழ்துளை கிணறுகள், தரைமட்டமான கிணறுகள் போன்றவை இருந்தால் உடனே புகார் தெரிவித்து, இனிமேலும், சுர்ஜித் போல ஒரு மரணம் நிகழ்ந்துவிடாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள்…

சென்னை குடிநீர் வாரியமும், பயன்படுத்தப்படாத திறந்தவெளி கிணறுகள், ஆழ்துளை கிணறுகள், நீர் உறிஞ்சு கிணறுகளை 24 மணி நேரத்தில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பாக மாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.  9445802145 என்ற கைப்பேசி எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் பயன்பெறலாம் என்று குடிநீர் வடிகால் வாரியம் அறிவித்துள்ளது.