சென்னை

கோலப் போராட்டத்தில் தேவை இல்லாமல் தங்களைப் பற்றிக் கூறியதாக அறப்போர் இயக்கத் தலைவர் காவல்துறையைச் சாடி உள்ளார்.

சென்னை பெசண்ட் நகர் பகுதியில் குடியுரிமை சட்டம், குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகக் கோலம் இட்டு சிலர் போராடினர்.  அவர்களை அனுமதி இன்றி பிறர் வீட்டு வாசலில் கோலமிட்டதாக காவல்துறையினர் கைது செய்தனர்.  இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் குறித்து சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நேற்று செய்தியாளர்களிடம் தகவல் அளித்தார்.

காயத்ரி

அப்போது அவர், இந்த கோலப் போராட்டத்தில் கலந்துக் கொண்ட காயத்ரி கந்தாடை என்னும் பெண்ணுக்கு சமூக வலைத் தளங்கள் மூலம் பாகிஸ்தான் நாட்டுடன் தொடர்பு உள்ளதாகக் குற்றம் சாட்டினார்.  மேலும் இஸ்லாமியத் தீவிரவாத இயக்கமான பாபுலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அறுப்போர் இயக்கம்  ஆகியவற்றுடன் காயத்ரிக்குத் தொடர்பு உள்ளதாகவும் தெரிவித்தார்.

இதற்கு அறுப்போர் இயக்கத் தலைவர் ஜெயராம் வெங்கடேசன், “சென்னை மாநகராட்சியில் நடந்த ஊழல்களைத் தொடர்ந்து அறப்போர் இயக்கம் வெளியிட்டு வருகிறது.   ஆனால் இது குறித்து சென்னை காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நடவடிக்கை எடுக்காமல் அறப்போர் இயக்கத்தின் மீது நடவடிக்கை எடுத்து வந்தார்.  இந்த குற்றச்சாட்டும் அத்தகையதாகும்.

கோலப்போராட்டம் குறித்து எங்கள் மீது குற்றம் சொல்லும் விஸ்வநாதன் ஏன் திமுக மீது எதுவும் சொல்லவில்லை.  ஏனெனில் வரும் 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி அமைத்தால் தாம் டிஜிபி ஆகி விட்வுஓம் என விஸ்வநாதன் நினைக்கிறார்.   அறப்போர் இயக்கத்துக்கும் காயத்ரிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என ஏற்கனவே காவல்துறைக்கு நாங்கள் தெரிவித்துள்ளோம்” எனக் கூறி உள்ளார்.