மாற்றுத்திறனாளிகளுக்கான நல திட்டங்கள் குறித்து விவாதிக்க தயாரா? கனிமொழிக்கு அமைச்சர் சரோஜா சவால்

சென்னை:

மாற்றுத்திறனாளிகளுக்கான நல திட்டங்கள்  உள்பட அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் தன்னுடன் ஒரே மேடையில் விவாதிக்க தயாரா? -அமைச்சர் சரோஜா திமுக எம்.பி. கனிமொழிக்கு சவால் விடுத்துள்ளார்.

டிசம்பர் 3ந்தேதி உலகம் முழுவதும், உலக மாற்றுத்திறனாளிகள் தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி  மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டி சென்னை அண்ணா பல்கலைக்கழக மைதானத்தில் நடைபெறுகிறது. இதற்கான நிகழ்ச்சியை தமிழக சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா தொடங்கி வைத்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், அப்போது,  திமுக ஆட்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்த நல திட்டங்கள் குறித்தும், தற்போது அ.தி.மு.க ஆட்சியில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்தும் தன்னுடன் ஒரே மேடையில் திமுக எம்பி கனிமொழி விவாதிக்க தயாரா என சமூகநலத்துறை அமைச்சர் சரோஜா கேள்வி எழுப்பியுள்ளார்.

 

கார்ட்டூன் கேலரி